Thursday, December 20, 2007

கையில் குழலுடன் பைய வருகிறான் பார் கண்ணன்

நித்யஸ்ரீ மகாதேவன் ‍‍ கர்நாடக உலகில் மிகவும் பரிச்சயம்
எனக்கு அவர் குரல் பிடிக்காமல் இருந்தாலும் இந்த பாடலை அவர் குரலில் கேட்டு மிகவும் ரசித்தேன்...

கையில் குழலுடன் பைய வருகிறான் பார் கண்ணன் என்ற அருமையான பாடல்

பாடலை பார்த்து கேட்டு மகிழுங்கள்


Monday, September 24, 2007

அழைக்கின்றான் மாதவன்

அட இந்த பாடலை எப்படி மறந்தேன்...

அழைக்கிறான் மாதவன்..

ஆஹா வாலியின் வரிகளில், இளையராஜாவின் இசையில்...பாடல் மிகவும் அற்புதம்

இதோ பாடலை பார்த்து மகிழுங்கள்


Friday, August 24, 2007

உந்தன் தேசத்தின் குரல்





Though INDEPENDENCE DAY has passed, here is a special song for Independence Day



இதோ சுதந்திர தின சிறப்புப் பாடல்
ஏ.ஆர்.ரகுமான் − வாலி கூட்டணி இரு இன்ப கூட்டணி..

வாலி இந்த பாடலில் அயல் நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும்
அழகான செய்தி சொல்கிறார் ..

படம்:தேசம்
பாடல் : உந்தன் தேசத்தின் குரல்
வரிகள்: வாலி
இசை & குரல்: ஏ.ஆர்.ரகுமான்

உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதோ..
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா
அயல் நாடுந்தன் வீடல்ல
விடுதியடா தமிழா
வானம் எங்கும் பறந்தாலும்
பறவை எண்ணம் அதன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் எண்ணம் தாய்நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
புல் மணத்தின் குரல் உந்தன் செவியில் விழாதா

உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதோ..
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

கங்கை உனை அழைக்கிறத
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழைக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க*
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க*
தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க*
கட்டிக்காத்த உறவுகள் அழைக்க*
நீதான் தின்ன நிலாச்சோறு தான் அழைக்க*

உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதோ..
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

பால்போல் உள்ள வெண்ணிலவில்
பார்த்தால் சிறு கறை இருக்கு
மலர்போல் உள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலி இருக்கு
கண்ணீர் துடைக்க வேண்டும்
உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும்
உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உண்ணாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்புத் தாயின் மடி உனை அழைக்குதே தமிழா

உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதோ..
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா


பாடலை இங்கே கண்டு கேட்டு மகிழுங்கள்





இதே பாடலை டொரன்டோவில் ரகுமான் நேரடியாக பாடுவதை
இங்கே பார்த்து மகிழுங்கள்